Sunday, February 13, 2011

தஞ்சாவூர் பொம்மைகள்


இண்டர்லோக்
விசயத்தில்
நம் இன
சமுதாயத் தலைவர்களின்
நடவடிக்கைகள்
உங்களை
நினைவுபடுத்துகிறது.


நன்றி
தலையாட்டி பொம்மைகள்

Thursday, January 20, 2011

இண்டர்லோக்

இந்தியர்களை
இழிவுபடுத்தும் நூல்

எதையும் தாங்கும்
இதயம் வேண்டும்
இதை தாங்க ஏது இதயம்
இரவல் வரிகள்தான்

இதயத்தை
உருகவைக்கும் வரிகள்


துடித்தோம்
அறிக்கை விட்டோம்
எரித்தோம்
ஆய்வு செய்தோம்
கூடினோம் பேசினோம்
முடிந்தபாடில்லை
யாரும்
செவி சாய்த்தபாடில்லை

இன்னும் துடிக்கின்றோம்

இது தொடர்ந்தால்
இந்தியன் என்ற பெயர் மாறி
.................
என்றே நம் இனம் மாறும்

ஆனாலும்
ஒரு வழி உண்டு

இந்தியர்களே
ஒன்று சேருங்கள்
ஒற்றுமையாக
ஒத்த முடிவெடுங்கள்

இந்தியர்களின்
எதிர்ப்பைக் காட்டுங்கள்

அதன்பின் பாருங்கள்

Thursday, January 13, 2011

தாடி




ஓவியனுக்கு அழகு
ஆன்மீகவாதிக்கு அழகு
இலக்கியவாதிக்கு அழகு

மூத்த அரசியல்வாதிக்கு அழகு
வெள்ளை தாடி
சிம்மக்குரலோனுக்கு அழகு






ஊர் சுற்றிக்கும் அழகு
தூங்கு மூஞ்சிக்கும் அழகு

சூதாடிக்கும் அழகு
காதல் தோல்வி
இளைஞனுக்கும் அழகு

உன் முகத்தில் தாடியா
இதில் எந்த ரகம் ?

எழுத மறந்த ரகமா ?

தாடி
உன் அடையாளம்
வளரும் முன்
யோசி.

Thursday, December 2, 2010

டத்தோ கோ.பழனிவேல் அவர்களே


நினைத்துப்பார்க்கின்றேன்

சாதனைத் தலைவரின் வாரிசே
சரித்திரம் படைக்கவிருக்கும்
தேசிய தலைவரே
டத்தோ கோ.பழ்னிவேல் அவர்களே

பிறந்த நாள் வாழ்த்துகள்


இதயத்து ஈரத்திலிருந்து
வாழ்த்துகின்றேன் -வெற்றி உமதே
தொகுதி,மாநிலம்,நாடு என ஆற்றிய
தொண்டினை நினைத்துப்பார்க்கின்றேன்

இரவின் மடியில்
உலகம் தூங்கியபோதும்
நீர் மட்டும் கண் விழித்தீர்
மக்களுக்காக சிந்தித்தீர்

தள்ளாடும் சமுதாயம்
தலை நிமிர
தேசியத் தலைவருக்கு
தோள் கொடுத்தீர்

நீர் வழங்கிய மான்யமோ
ஆயிரமாயிரம்
செயல் திறனைச் சொல்ல
சொற்களைத் தேடுகின்றேன்

தமிழ்ப்பள்ளிகளுக்கும்
கோவில்களுக்கும்
பேசும் சக்தி இருந்தால்
உன் போராட்டத்தில்
பிரச்சாரப் பீரங்கிகளாக
வெடித்திருக்கும்

உன் எதிரிகள் உம்மை வீழ்த்த
உன்னைச் சுற்றியே
தருணம் பார்த்து
காத்துக் கொண்டிருகிறார்கள்

உமக்குப் புரியாததா
அல்லது தெரியாததா
அரசியல் உமக்கு அல்வா
அமைதியாகவே
அடக்கி விடுவாய்
எனபது தெரியும்

நீர் உன் தமிழை மட்டும்
உயர்த்திக் கொள்
அதுவே உன் பலஹீனம்
உன்னைக் கவிழ்க்க
அதுதானே எதிரிகளுக்கு
ஆயுதம்

நீர் வீழமாட்டாய்
அய்யன் துணை இருக்கும்வரை
உன் நிழலில் நிச்சயம்
நம் சமுதாயம் உயரும்


யானையின் பலமில்லை உம்மிடம்
சிங்கத்தின் சீற்றமில்லை உம்மிடம்
புலியின் வேகமில்லை உம்மிடம்
ஆனால்
வேகமும் விவேகமும் திறமையும்
அய்யனின் அருளும் உண்டு

தேசியத்தலைவரே
வாழ்த்துகின்றேன்.
வாழ்க பல்லாண்டு !

Monday, May 10, 2010

அன்னையே ,என் உயிரே

மூத்த மகனோ
காஞ்சிப்புரச் சேலையைப்
பரிசு தர

மகளோ
வகை வகையான
சுவையான
உணவு சமைக்க

மருமகளோ
உடனிருந்து அன்புடன்
உபசரிக்க


இளைய மகனோ
இரவு உணவுக்கு
அழைத்துச் செல்ல

பேரக்குழந்தைகளோ
கோவில் பிரசாதத்தை
போட்டி போட்டு ஊட்ட


அன்னையர் தினத்தன்று
கோடீஸ்வரனுக்குக்கூட
கிடைக்காத வரம்

அன்பு மழையில்
ஆனந்தக் கண்ணீரில்
அம்மா நனைந்தபொழுது
அவள்
கொடுத்து வைத்தவள்

பணம் என்னடா
பணம் ! பணம் !

நித்யா

சிறைச்சாலை
சீருடை
சாமியாருக்கு
இல்லை

தனிச்சிறப்புதான்

!!!!!!!!!!!!!!!!!!

Tuesday, February 23, 2010

முருகா நீயுமா


தலைவர்களே
எப்படி ஐயா
உம் பெயருக்குள்
முருகன்



சாமிவேலு
சுப்பிரமணியம்
பழனிவேல்
சரவணன்
கேவியஸ் என்ற சுப்பிரமணியம்
முருகையா

நம் சமுதாயத்
தலைவர்கள்
அனைவருக்கும்
முருகன் பெயர்

பத்துமலை முருகா
இதுவும் உன்
திருவிளையாடலா
யாரறிவார்


புரிகின்றது முருகா
தலைவர் ஆக
உன் பெயரோடு
ஆசீர்வாதம் தேவை