Tuesday, August 18, 2009

சோனி

சோனி,
உதட்டோடு உறவாடி
உள்ளதை உள்ளபடியே
பிரதிபலித்தாயே
உமக்கா இக்கதி..?

ஈராண்டுகள் மட்டும்
என்னோடு பேசி
இன்று
கீழே விழுந்து
உயிர்க்குலைந்தாயே

தெளிவான குரல்
சொன்னதை சொன்னபடியே
உச்சரிப்புக் குறையாமல்
எதிரொலிக்கும் உன் திறன்
வேறு யாருக்கு வரும்

சோனி
உன்னையன்றி
வேறு யாரையும்
கைப்பிடிக்க
என் மனம் இடம் தரா

எவ்வளவு
செலவானாலும்
குணப்படுத்தி
மீண்டும் உன்னையே
கரம் பிடிப்பேன்
கவலைப்படாதே

Tuesday, August 11, 2009

ஓ.. சுதந்திரத் தந்தையே...




ஓ..
சுதந்திரத் தந்தையே

சுதந்திரத்தை வாங்கி
கையோடு
கொண்டு சென்றாய்
தந்திரத்தை அல்லவா
விட்டுச் சென்றாய்



குள்ளநரி மனித
மத ,பதவி
இனப் போராட்டங்கள்
இன்னும்
ஓய்ந்தப் பாடில்லை


சுதந்திரத் தந்தையே

உயிர் பெற்று வா
சுதந்திரத்தைக்
கொடுத்துவிட்டு
தந்திரத்தை
எடுத்துச் செல்

சுதந்திரப் போர்வையில்
சதிராடும் செயல்கள்
அமைதிப் போராட்டங்கள்
அமர்க்களமாய்
சந்தி சிரிக்கின்றன

உயிர் பெற்று வா

Friday, August 7, 2009

பெண் ஓர் இனிப்பான விஷம்



அன்று
காதலில்
நான்
கரும்பானேன்



இன்று
மாற்றானை
கைப்பிடிக்க
கறிவேப்பிலையானேன்

தேவையின் போது
பயன்படுத்தி
தேவையற்ற போது
தூக்கி எறியப்பட்ட
கறிவேப்பிலை நிலை

எனவேதான்
பெண் ஓர்
இனிப்பான விஷம்
எனக்கு மட்டும் .......

Wednesday, August 5, 2009

குழிக்குள் தங்கம்


குழிக்குள்
தங்கம்
யாருக்குச்
சொந்தம்..?


தங்கத்தை
எடுத்து
உரியவரிடம்
சேர்க்க வேண்டும்
அவ்வளவுதான்
பிரசினை முடிந்தது
ஆனால் இன்று
நடப்பதோ வேறு

குழிக்கு வெளியே
தங்கத்தைப் பற்றிய
ஆய்வு
யாருக்குச் சொந்தம்
எனபதில் குழப்பம்

இப்படியோ
அப்படியோ என
வீண் விவாதம்

விட்டுகொடுக்காத
முடிவுகள்

வாய்ப் பேச்சு
கைகலப்பில் முடிவு

இறுதியில்
குழிக்குள் ஒருவன் விழ
மற்றவர்கள் நகைப்பு

இன்றைய
நாட்டு நடப்பில்
நம்மிடையே காணும்
நடைமுறை வழக்கம்
இதுதான்

பிரசினைகளைச் சுலபமாக
தீர்க்க வழி இருந்தும்
தீர்க்காமல் பேசியே
காலத்தைக்
கழிக்கின்றோம்

தங்கம் இன்னும்
குழியிலேயே
இருப்பது போல...

நானும் இன்னும்
எடுக்காமல்
இவ்வளவு நீளம்
எழுதிவிட்டேனே...

உங்களில் நானும்
ஒருவன்
அதனால்தான்
என்னவோ....

Tuesday, August 4, 2009

ஏனய்யா வம்பு ?




ஒரு கட்சியில்
சேர்ந்து
மக்களுக்கு
சேவை செய்ய
ஆசை




ம.இ.காவில்
சாமிவேலு -சுப்ரா
ஓய்ந்தபாடில்லை
கூட வளர்ந்த சோதியே
எதிரியான நிலை

ம.மு.க.வில்
கேவியஸ் -முருகையா
தூறல் நிற்கவில்லை
வளரும் இளந்தலைவனை
ஒழித்துக் கட்டும் நிலை

ஐ.பி.எப்.பில்
நீயா நானா
தலைவர் போராட்டம்
பண்டிதனுக்கும் பின்
பதிவு ரத்தாகுமோ நிலை

ஹிண்ட்ராப்
உரிமைக்குரல் கொடுத்த
நேற்றையப் போராட்டவாதிகள்
இன்று அரசியல்வாதிகள்
ஆளுக்கொரு கட்சி

புதிய கட்சிகள்
அறிக்கைகளோடு சரி
செயல் பாடு காணோம்
நாளைய நிலை
புரியவில்லை

ஏனய்யா வம்பு ?
தனியாக உழைத்து
குடும்பத்தை உயர்த்தி
தன்னிச்சையாக
உதவுவோமே.......