இந்தியர்களை
இழிவுபடுத்தும் நூல்
எதையும் தாங்கும்
இதயம் வேண்டும்
இதை தாங்க ஏது இதயம்
இரவல் வரிகள்தான்
இதயத்தை
உருகவைக்கும் வரிகள்
துடித்தோம்
அறிக்கை விட்டோம்
எரித்தோம்
ஆய்வு செய்தோம்
கூடினோம் பேசினோம்
முடிந்தபாடில்லை
யாரும்
செவி சாய்த்தபாடில்லை
இன்னும் துடிக்கின்றோம்
இது தொடர்ந்தால்
இந்தியன் என்ற பெயர் மாறி
.................
என்றே நம் இனம் மாறும்
ஆனாலும்
ஒரு வழி உண்டு
இந்தியர்களே
ஒன்று சேருங்கள்
ஒற்றுமையாக
ஒத்த முடிவெடுங்கள்
இந்தியர்களின்
எதிர்ப்பைக் காட்டுங்கள்
அதன்பின் பாருங்கள்
Thursday, January 20, 2011
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
இதுதான்டா ஒரே மலேசியா… நமது அரசாங்கமும் கல்வியமைச்சும் இன்னும் ஆய்வு செய்கிறதாம் இந்த நாவலை…. ஆளும் வர்க்கத்தினர் தின்று போடும் எலும்புகளை நக்கி சுகம் காணும் கைக்கூலி தலைவர்களும் அவர்களின் அடிவருடிகளும் இருக்கும் வரை ஆய்வுகளூம் அவமானங்களும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
எதிர்வரும் 27 பிப்ரவரியன்று நம் பலத்தினை மீண்டும் காட்டுவோம்..
Post a Comment