
காஞ்சிப்புரச் சேலையைப்
பரிசு தர
மகளோ
வகை வகையான
சுவையான
உணவு சமைக்க
மருமகளோ
உடனிருந்து அன்புடன்
உபசரிக்க
இளைய மகனோ
இரவு உணவுக்கு
அழைத்துச் செல்ல
பேரக்குழந்தைகளோ
கோவில் பிரசாதத்தை
போட்டி போட்டு ஊட்ட
அன்னையர் தினத்தன்று
கோடீஸ்வரனுக்குக்கூட
கிடைக்காத வரம்
அன்பு மழையில்
ஆனந்தக் கண்ணீரில்
அம்மா நனைந்தபொழுது
அவள்
கொடுத்து வைத்தவள்
பணம் என்னடா
பணம் ! பணம் !
3 comments:
அருமைங்க
கலக்கல்...
தாய்மை எனும் பெரும் பதவி கோடிஸ்வரனுக்கு கிடைக்காது, கோடிஸ்வரிக்கு கிடைக்கலாம்.
Post a Comment