Friday, August 7, 2009

பெண் ஓர் இனிப்பான விஷம்



அன்று
காதலில்
நான்
கரும்பானேன்



இன்று
மாற்றானை
கைப்பிடிக்க
கறிவேப்பிலையானேன்

தேவையின் போது
பயன்படுத்தி
தேவையற்ற போது
தூக்கி எறியப்பட்ட
கறிவேப்பிலை நிலை

எனவேதான்
பெண் ஓர்
இனிப்பான விஷம்
எனக்கு மட்டும் .......

Wednesday, August 5, 2009

குழிக்குள் தங்கம்


குழிக்குள்
தங்கம்
யாருக்குச்
சொந்தம்..?


தங்கத்தை
எடுத்து
உரியவரிடம்
சேர்க்க வேண்டும்
அவ்வளவுதான்
பிரசினை முடிந்தது
ஆனால் இன்று
நடப்பதோ வேறு

குழிக்கு வெளியே
தங்கத்தைப் பற்றிய
ஆய்வு
யாருக்குச் சொந்தம்
எனபதில் குழப்பம்

இப்படியோ
அப்படியோ என
வீண் விவாதம்

விட்டுகொடுக்காத
முடிவுகள்

வாய்ப் பேச்சு
கைகலப்பில் முடிவு

இறுதியில்
குழிக்குள் ஒருவன் விழ
மற்றவர்கள் நகைப்பு

இன்றைய
நாட்டு நடப்பில்
நம்மிடையே காணும்
நடைமுறை வழக்கம்
இதுதான்

பிரசினைகளைச் சுலபமாக
தீர்க்க வழி இருந்தும்
தீர்க்காமல் பேசியே
காலத்தைக்
கழிக்கின்றோம்

தங்கம் இன்னும்
குழியிலேயே
இருப்பது போல...

நானும் இன்னும்
எடுக்காமல்
இவ்வளவு நீளம்
எழுதிவிட்டேனே...

உங்களில் நானும்
ஒருவன்
அதனால்தான்
என்னவோ....

Tuesday, August 4, 2009

ஏனய்யா வம்பு ?




ஒரு கட்சியில்
சேர்ந்து
மக்களுக்கு
சேவை செய்ய
ஆசை




ம.இ.காவில்
சாமிவேலு -சுப்ரா
ஓய்ந்தபாடில்லை
கூட வளர்ந்த சோதியே
எதிரியான நிலை

ம.மு.க.வில்
கேவியஸ் -முருகையா
தூறல் நிற்கவில்லை
வளரும் இளந்தலைவனை
ஒழித்துக் கட்டும் நிலை

ஐ.பி.எப்.பில்
நீயா நானா
தலைவர் போராட்டம்
பண்டிதனுக்கும் பின்
பதிவு ரத்தாகுமோ நிலை

ஹிண்ட்ராப்
உரிமைக்குரல் கொடுத்த
நேற்றையப் போராட்டவாதிகள்
இன்று அரசியல்வாதிகள்
ஆளுக்கொரு கட்சி

புதிய கட்சிகள்
அறிக்கைகளோடு சரி
செயல் பாடு காணோம்
நாளைய நிலை
புரியவில்லை

ஏனய்யா வம்பு ?
தனியாக உழைத்து
குடும்பத்தை உயர்த்தி
தன்னிச்சையாக
உதவுவோமே.......

Tuesday, July 28, 2009

சொல்லுக்குள் சொல்


வார்த்தைக்குள் வார்த்தை
விடையைத் தந்தது
மழைக்குக் குடை
கைப்பிடியைப் போல்

நிம்மதி
மதியால் தேடு
வாழ்க்கை
கையால் தேடு
தொடங்கி விட்டேன்
தொடர்ந்து கூறு
எமக்குள் சில
உம்மிடம் பல

கண்டுபிடி
காட்சிப் பொருளாக்கு
கண்விழித்து
காத்திருக்கின்றேன்.




Monday, July 27, 2009

சூரிய ஒளி



உன் பார்வையில்
உலகம் ஒளிர் விட்டு
பிரகாசிக்கிறதே
எப்படி





வானத்தை பார்த்து
நிலா சொன்னது
அது என் ஒளியல்ல
சூரியனின் ஒளி


மனைவி புன்னகையோடு
கணவனைப் பார்த்தாள்
அவள் முகத்தில்
சூரிய ஒளி

Sunday, July 26, 2009

பாலர் பள்ளி அமைக்க


மலேசியத் தமிழ் அற வாரியம் 14-02-2003 ல் தனித்தன்மையுடன் சமூக மேம்பாட்டிற்காக தொடங்கப்பட்டது.தமிழ்க் கல்வியைக் கருப்பொருளாக கொண்டு தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கல்வித்துறையில் மேம்பாடு காண பல செயல் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.

அந்த வகையில் பாலர் பள்ளித்திட்டத்தையும் அதன் பணிகளில் ஒன்றாக செயல் படுத்தி வருகின்றது.

2006ல் தொடங்கி 9 பாலர் பள்ளிகளை தேர்வு செய்து,தேவையான வகுப்பறைத் தளவாடப் பொருட்கள் மற்றும் பாலர் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் ஆகியவற்றை வழங்கி வருகின்றது.

தற்பொழுது 2009ல் 14 பாலர் பள்ளிகளுக்கு மலேசியத் தமிழ் அறவாரியம் ஆதரவு வழங்கி வருகின்றது.


01.தமிழ்ப்பள்ளி எடின்பெர்க் பாலர் பள்ளி
02.தமிழ்ப்பள்ளி சிகாம்புட் பாலர் பள்ளி
03.தமிழ்ப்பள்ளி அப்பர் பாலர் பள்ளி
04.தமிழ்ப்பள்ளி மேரு சாலை,கிள்ளான் பாலர் பள்ளி
05.தமிழ்ப்பள்ளி மகாத்மா காந்தி கலாசாலை,சுங்கை சிப்புட்,பாலர் பள்ளி.
06.தமிழ்ப்பள்ளி தம்புசாமி செந்தூள் பாலர் பள்ளி.
07.தமிழ்ப்பள்ளி மிட்லேண்ட்ஸ் பாலர் பள்ளி
08.தமிழ்ப்பள்ளி புக்கிட் ஜாலில் பாலர் பள்ளி
09.தமிழ்ப்பள்ளி செமெந்தான் மெந்தகாப்.பகாங்,பாலர் பள்ளி
10.தமிழ்ப்பள்ளி எடென்செர் மெந்தகாப்,பகாங்,பாலர் பள்ளி
11.தமிழ்ப்பள்ளி மெந்தகாப் தோட்டம்,பகாங்,பாலர் பள்ளி
12.சுப்ரமணியர் ஆலயம் பண்டார் சன்வே,பாலர் பள்ளி
13.கரு மாரியம்மன் ஆலயம்,சிரம்பான்,பாலர் பள்ளி
14.பால தபாவனம் ஆசிரமம் பாடாங் ஜாவா,பாலர் பள்ளி


புதிதாக தொடங்கவிருக்கும் பாலர் பள்ளிகள்

01.தமிழ்ப்பள்ளி பாசிர் கூடாங்,ஜோகூர் பாலர் பள்ளி
02.தமிழ்ப்பள்ளி ரிவர்சைட் தோட்டம்,கோல சிலாங்கூர்,பாலர் பள்ளி

இதனை மேலும் 25 ஆக பாலர் பள்ளிகளாக உயர்த்த வேண்டும் என்பதே நம்முடைய நோக்கம்.

பாலர் பள்ளிகள் நடத்திவரும் பெற்றோர் ஆசிரியர் சங்கம்,கோயில் நிர்வாகம்,தனி இயக்கங்கள் மலேசியத் தமிழ் அற வாரியத்தின் ஆதரவுடன் செயல்பட விரும்பினால் எங்களுடன் தொடர்பு கொள்வதை வரவேற்கின்றோம்.

தொடர்புக்கு : சு.காந்தியப்பன். பி.பி.என். -012-6475135
(பாலர் பள்ளி ஒருங்கிணைப்பாள்ர்)
அலுவலகம் :03-26926533

மலேசியத் தமிழ் அறவாரியம் எவ்வகையில் உதவ முடியும் ?
01. ஒரு புதிய வகுப்பறை கட்டுவதற்கு
02. தேவையான புத்தகங்கள் / மேசைகள் / நாற்காலிகள்
03. தேவையான விளையாட்டுப் பொருட்கள்
04. படிப்பதற்கு தேவையான உபகரங்கள்
05. ஆசிரியர்களுக்கான பயிற்சிகள்
06. பாலர் பள்ளியின் மேற்பார்வை,கண்காணிப்பு சேவையை
மலேசியத் தமிழ் அறவாரியம் வழங்கும்

நடைபெற்ற நிகழ்வுகள்

2008
கடந்த 09-11-2008 ல் மதிய மணி 2.00 முதல் மாலை மணி 6.00 வரை
தான்சிறி கே.ஆர்.சோமா அரங்கம்,விஸ்மா துன் சம்பந்தன்,கோலாலம்பூரில்
பாலர் பள்ளி மாணவர்களின் கலை விழா'அரும்புகளின் அற்புதங்கள்' சிறப்பாக நடைபெற்றது.


2009

01. பொங்கல் விழா ( ஜனவரி)
02.திருமுறை / திருக்குறள் போட்டிகள் (மே)
03.வசந்த விழா (ஜூன்)
04.கல்விக் கருத்தரங்கு (ஜூலை)
கல்விச் சுற்றுலா - கேமரன் மலை
05.பாலர் பள்ளி கலை விழா (நவம்பர்)

வானம் அழ


வானம் அழ
பயிர்கள் சிரிக்க
ஒருவர் தியாகம்
பிறர் வாழ்க்கை


உன் பெற்றோர்க்காக
உன் உடன் பிறப்பிற்காக
உன் குடும்பத்திற்காக
உன் நாட்டிற்காக


உன் தாய்க்காக
உன் தாய்மொழிக்காக
உன் தமிழுக்காக
உன் உயிர்மூச்சை


இளைஞனே
நீ தியாகம் செய்
நாளை
நீ சரித்திரம்