
ஆண் மகனாக
பிறந்துவிட்டேன்
தாயின் முகத்தில்
மகிழ்ச்சி இல்லை
புரியவில்லை
மண்ணைப்
பார்த்தேன்
ஈழத்து மண்
புரிந்து விட்டது
போராட்டங்கள்
முடியவில்லை
பிறந்த நாள் தொட்டு
போராடப் பிறந்தேனோ
மகனாக பிறந்ததில்
சிரித்துக் கொண்டே
அழுகின்றாள் தாய்
தாய் முகத்தில்
மகிழ்ச்சி வருமா
காலந்தின்
விடியலுக்காக
காத்திருக்கிறேன்
2 comments:
//ஆண் மகனாக
பிறந்துவிட்டேன்
தாயின் முகத்தில்
மகிழ்ச்சி இல்லை
புரியவில்லை
மண்ணைப்
பார்த்தேன்
ஈழத்து மண்
புரிந்து விட்டது//
உணர்வுகளை பிரதிபலிக்கிறது உங்கள் கவிதை...
//காலந்தின்//.... ????
இதன் அர்த்தம் என்ன?
ஆண் என்றாலும் பெண் என்றாலும் தமிழ் இனம் காக்கவே எனறு எல்லா தமிழ்த் தாயும் மகிழ்ந்து தாலாட்டிடுவர்.காலம் கனியும்.
Post a Comment