
நீ நல்லவரா
கெட்டவரா
நாயகன் படத்தில்
ஆஹா ஹா என
சிரிப்பாய்
புரியவில்லை
சனிப்பெயர்ச்சியன்று
சனீஸ்வரனைக்
கேட்டேன்
நீ நல்லவரா
கெட்டவரா
ஏனெனில்
கொடுப்பவனும் நீர்
கெடுப்பவனும் நீர்
சனீஸ்வரன்
சிரித்தார்
கமலஹாசனைப் போல்
சிரிப்பின் பொருள்
புரியவில்லை
வேறு வழியின்றி
சனிதோறும்
சனீஸ்வரனை
ஒன்பது முறை
சுற்றுகிறேன்
சுற்றுவேன்
சனீஸ்வரன்
எனக்கு மட்டும்
நல்லவர்
ஆகும் வரை
கொடுப்பார் அல்லவா
சுயநலம்
No comments:
Post a Comment