skip to main |
skip to sidebar

உலகநாயகனே
நீ நல்லவரா
கெட்டவரா
நாயகன் படத்தில்
ஆஹா ஹா என
சிரிப்பாய்
புரியவில்லை
சனிப்பெயர்ச்சியன்று
சனீஸ்வரனைக்
கேட்டேன்
நீ நல்லவரா
கெட்டவரா
ஏனெனில்
கொடுப்பவனும் நீர்
கெடுப்பவனும் நீர்
சனீஸ்வரன்
சிரித்தார்
கமலஹாசனைப் போல்
சிரிப்பின் பொருள்
புரியவில்லை
வேறு வழியின்றி
சனிதோறும்
சனீஸ்வரனை
ஒன்பது முறை
சுற்றுகிறேன்
சுற்றுவேன்
சனீஸ்வரன்
எனக்கு மட்டும்
நல்லவர்
ஆகும் வரை
கொடுப்பார் அல்லவா
சுயநலம்

மன உளைச்சல்
போராட்டம்
கண் விழித்த
மறு கண
சிந்தனை
பணம் ! பணம் !
இருபது முதல்
அறுபது வரை
பணம் தேடுதல்
வாழ்க்கைப்
போராட்டமா
தற்கொலை
செய்து கொண்டால்
பிரசினை இல்லையே
இருபது வயது
இளைஞன்
பதில் சொன்னான்
இறந்து மண்ணுக்கு
சொந்தமாவதை விட
உயிரோடு இருந்து
போராடி வெற்றி பெறு !
இறப்பதைவிட
இருப்பது மேல்
இது ஓர்
உண்மை உரையாடல்

தொட்டவுடன்
சிணுங்கும்
தொட்டாச் சிணுங்கியே
தொட்டால்
ஏன்
சிணுங்குகின்றாய்
தொடாமல்
பசியால்
சிணுங்கும்
சுருங்கும்
அகதிகளின் குடல்கள்
குழந்தைகளின்
வயிறுகள்
ஆயிரமாயிரம்
அறியாயோ ?
என்ன
செய்யப் போகிறாய்