Monday, July 27, 2009

சூரிய ஒளி



உன் பார்வையில்
உலகம் ஒளிர் விட்டு
பிரகாசிக்கிறதே
எப்படி





வானத்தை பார்த்து
நிலா சொன்னது
அது என் ஒளியல்ல
சூரியனின் ஒளி


மனைவி புன்னகையோடு
கணவனைப் பார்த்தாள்
அவள் முகத்தில்
சூரிய ஒளி

6 comments:

தமிழ் said...

/உன் பார்வையில்
உலகம் ஒளிர் விட்டு
பிரகாசிக்கிறதே
எப்படி
வானத்தை பார்த்து
நிலா சொன்னது
அது என் ஒளியல்ல
சூரியனின் ஒளி/

அருமை

சூரியன் மறைவுக்கு பின் நிலா தோன்றுவதைக் கண்டு , பல மாதங்களுக்கு முன் எழுதிய வரிகள்

இருக்கும்வரை
இருளை ஒழி
இறந்த பின்
இன்னொருவருக்கு ஒளி
இது தான்
இயற்கையின் ஒலி

சுகாந்தினி said...
This comment has been removed by the author.
சுகாந்தினி said...

நன்றி
என் வரிகளை விட
உம் வரிகள் அமர்க்களம்
பாராட்டுகள்

துபாய் ராஜா said...

உவமானம்,உவமேயம் அருமை.

வாழ்த்துக்கள்.

Tamilvanan said...

கவிதை நன்று

அது சரி, எவ்வளவு நாளைக்குத்தான் கணவனை, காதலனை,ஆண்களை சூரியனாகவும் மனைவியை ,காதலியை, பெண்களை நிலாவாகவும் காட்டப்போகிறீர்கள்?

இன்றைய காலத்தில் பல நிலாக்கள் தான் சூரியனுகளுக்கே வெளிச்சம் எனும் வசந்த வாழ்வினை காட்டுகிறார்கள்.

சுகாந்தினி said...

துபாய் ராஜா அவர்களே
நன்றி

தமிழ்வாணன் அவர்களே
நன்றி

அவகாசம் தாருங்கள்
யோசிக்கின்றேன்