Monday, June 15, 2009

தாலி தேவையா.. ? (கற்பனையல்ல..)

இருபத்தைந்து வயது இளைஞன். நல்ல பண்பாளன்.நிறைய கதைப் புத்தகங்களையும் நாவல்களையும் படித்தவன்.

என்னுடன் பேசிக்கொண்டிருந்தான்.
"தாலி தேவையா..? தாலி கட்டாமல் வாழ முடியாதா ?
இந்து மதம் எனக்குப் பிடிக்காத மதம். மதமின்றி மனிதனாக வாழ வேண்டும்" என வயதிற்கு முதிர்ந்த விவாதத்தில் ஈடுபட்டான்.
நான் அதிர்ந்து போனேன்.இருப்பினும் இயன்ற மட்டும் இளைஞனைத் திருப்தி படுத்த விளக்கம் கொடுத்தேன்.நிறைவு பெறாமலே இளைஞன் சென்றுவிட்டான்.

யோசிக்கின்றேன்.

இவரைப் போல் சிந்தனையுடைய சில இளைஞர்களுக்கு
யார் மனதையும் புண்படுத்தாத வகையில்
நல்லதொரு தெளிவான விளக்கத்தை ஆன்மீகவாளர்கள்,சிந்தனையாளர்கள் பதில் கூற விரும்பினால் சிறப்பு.

எதிர்ப்பார்க்கின்றேன்..

Thursday, June 11, 2009

பணம்

கையில்
காசில்லை
என் நிழல் கூட
மதிக்காமல்
என்னை விட்டு
தனியாக
ஓடியது

Tuesday, June 9, 2009

அறமே நீயுமா ?

சூரியன் ஒளி தர
மன்னர் ஆட்சி புரிய
மலை நடு வயலில்
இராகம் அசை போட
பசு ஓய்வின்றி உழைக்க
பயிர்கள் செழித்தோங்க
இதுவரை சரி - உள்ளே

வேலியே பயிரை மேய
வேங்கை மானை விரட்ட
உழைப்போர் ஒதுக்கப் பட
அறமே அலை மோத
சூன்ய மைய சூழலை
மாற்றுவோர் யார் ?
நித்திரைவிழிக்கும்வரை
வித்தியாசமான
தாலாட்டு

Monday, June 8, 2009

அழகு


நிலவே
உன்னை
ஏன் நோக்க
என் மனைவி
என்னருகில் இருக்க

தமிழே ! கலைஞரே !

கலைஞரே!
எண்பத்தாறு வயது
யாரைய்யா சொன்னது?

எழுத்தால் ஆட்சியைப்
பிடித்தவர் நீர் !
உம்மால்
தமிழுக்குப் பெருமை
நீர் ஓர் ஆழ்கடல்
எழுதாத எழுத்தா
வரையாத ஒவியமா
தொடாத காவியமா

உம் பேனாவின்
மை மட்டும்
எப்படி ஐயா
சரித்திரம் படைக்கின்றது
சொல்லிக் கொடுங்கள்

நீர் ஓர் ஊற்று
அள்ள அள்ள குறையா
அமுத சுரபி
உம்மிடம் கற்றுக் கொள்ள
வாழ்நாள் போதாது

உம் காலத்திலேயே
உம் தமிழை
இரவல் வாங்கி -நாங்கள்
தாளை நனைக்கின்றோம்
அது ஒன்றே போதும்

உம் பேனா முனை
வலிமையைப் போல்
பல்லாண்டு வாழ
இறைவனிடம்
கெஞ்சுகின்றோம் - வாழ்க !

கறுப்பு தான்..........

கறுப்புக்கு
முதல் மரியாதை
கொடுத்தவன் நீர்!

வெள்ளைக்குள்
கறுப்பு முதல்வனாக
நுழைந்தவன் நீர்!

ஒபாமா - நீர்
ஒப்பற்ற மாவீரன்
உயர்வாய்!

உன் வரவால்
வெள்ளை மாளிகை
மின்னுகின்றது

விண்ணும் மண்ணும்
உன்னை வாழ்த்தி
வணங்குகின்றது!

வேட்பாளர்


"அம்மா... தாயே! ! "

எட்டிப் பார்த்தேன்

பிச்சைக்காரனல்ல !

Sunday, June 7, 2009

ஊக்கம்

ஊசலாடும் உயிரைக் கூட
உட்கார வைத்து
நடக்க வைத்து
நிமிர வைத்து
உயர்வான சிந்தனைக்கு
உந்து தள்ளி
ஒய்யாரமாய்
நடை போட வைக்கும்
மாபெரும் சக்தி

சோர்வில்
பிணமாக
நடமாடுவோர் சிலர்

ஊக்கத்தில்
இமயத்தைத்
தொட்டோர் பலர்

நீர்......
எந்த ரகம் ?

Monday, June 1, 2009

நீயுமா ?

விலைவாசி ஏற்றம்

சிக்கல்வாசி சீற்றம்

இயலாமையின்

குறுக்குவழி

தற்கொலை!


இருபது அடி உயரத்தில்

தூக்கில் தொங்கினான்

சாகவில்லை!

நோக்கினான்

சிரித்தது தூக்குக்கயிறு.
விலைவாசி மட்டுமா

எல்லாவற்றிலும் ஏற்றம்

ஏன் என்னை மட்டும்

ஏற்றவில்லை

என்னையும் ஏற்று !


ஏற்று

இருபதை

முப்பதாக்கு

உன்னை நான்

ஏற்றுக்கொள்கிறேன்!


வாயைத் திறந்தான்

இன்னும் மூடவில்லை!