Thursday, December 2, 2010

டத்தோ கோ.பழனிவேல் அவர்களே


நினைத்துப்பார்க்கின்றேன்

சாதனைத் தலைவரின் வாரிசே
சரித்திரம் படைக்கவிருக்கும்
தேசிய தலைவரே
டத்தோ கோ.பழ்னிவேல் அவர்களே

பிறந்த நாள் வாழ்த்துகள்


இதயத்து ஈரத்திலிருந்து
வாழ்த்துகின்றேன் -வெற்றி உமதே
தொகுதி,மாநிலம்,நாடு என ஆற்றிய
தொண்டினை நினைத்துப்பார்க்கின்றேன்

இரவின் மடியில்
உலகம் தூங்கியபோதும்
நீர் மட்டும் கண் விழித்தீர்
மக்களுக்காக சிந்தித்தீர்

தள்ளாடும் சமுதாயம்
தலை நிமிர
தேசியத் தலைவருக்கு
தோள் கொடுத்தீர்

நீர் வழங்கிய மான்யமோ
ஆயிரமாயிரம்
செயல் திறனைச் சொல்ல
சொற்களைத் தேடுகின்றேன்

தமிழ்ப்பள்ளிகளுக்கும்
கோவில்களுக்கும்
பேசும் சக்தி இருந்தால்
உன் போராட்டத்தில்
பிரச்சாரப் பீரங்கிகளாக
வெடித்திருக்கும்

உன் எதிரிகள் உம்மை வீழ்த்த
உன்னைச் சுற்றியே
தருணம் பார்த்து
காத்துக் கொண்டிருகிறார்கள்

உமக்குப் புரியாததா
அல்லது தெரியாததா
அரசியல் உமக்கு அல்வா
அமைதியாகவே
அடக்கி விடுவாய்
எனபது தெரியும்

நீர் உன் தமிழை மட்டும்
உயர்த்திக் கொள்
அதுவே உன் பலஹீனம்
உன்னைக் கவிழ்க்க
அதுதானே எதிரிகளுக்கு
ஆயுதம்

நீர் வீழமாட்டாய்
அய்யன் துணை இருக்கும்வரை
உன் நிழலில் நிச்சயம்
நம் சமுதாயம் உயரும்


யானையின் பலமில்லை உம்மிடம்
சிங்கத்தின் சீற்றமில்லை உம்மிடம்
புலியின் வேகமில்லை உம்மிடம்
ஆனால்
வேகமும் விவேகமும் திறமையும்
அய்யனின் அருளும் உண்டு

தேசியத்தலைவரே
வாழ்த்துகின்றேன்.
வாழ்க பல்லாண்டு !

Monday, May 10, 2010

அன்னையே ,என் உயிரே

மூத்த மகனோ
காஞ்சிப்புரச் சேலையைப்
பரிசு தர

மகளோ
வகை வகையான
சுவையான
உணவு சமைக்க

மருமகளோ
உடனிருந்து அன்புடன்
உபசரிக்க


இளைய மகனோ
இரவு உணவுக்கு
அழைத்துச் செல்ல

பேரக்குழந்தைகளோ
கோவில் பிரசாதத்தை
போட்டி போட்டு ஊட்ட


அன்னையர் தினத்தன்று
கோடீஸ்வரனுக்குக்கூட
கிடைக்காத வரம்

அன்பு மழையில்
ஆனந்தக் கண்ணீரில்
அம்மா நனைந்தபொழுது
அவள்
கொடுத்து வைத்தவள்

பணம் என்னடா
பணம் ! பணம் !

நித்யா

சிறைச்சாலை
சீருடை
சாமியாருக்கு
இல்லை

தனிச்சிறப்புதான்

!!!!!!!!!!!!!!!!!!

Tuesday, February 23, 2010

முருகா நீயுமா


தலைவர்களே
எப்படி ஐயா
உம் பெயருக்குள்
முருகன்



சாமிவேலு
சுப்பிரமணியம்
பழனிவேல்
சரவணன்
கேவியஸ் என்ற சுப்பிரமணியம்
முருகையா

நம் சமுதாயத்
தலைவர்கள்
அனைவருக்கும்
முருகன் பெயர்

பத்துமலை முருகா
இதுவும் உன்
திருவிளையாடலா
யாரறிவார்


புரிகின்றது முருகா
தலைவர் ஆக
உன் பெயரோடு
ஆசீர்வாதம் தேவை

Tuesday, February 9, 2010

தமிழ் மகன்



ஆண் மகனாக
பிறந்துவிட்டேன்
தாயின் முகத்தில்
மகிழ்ச்சி இல்லை

புரியவில்லை
மண்ணைப்
பார்த்தேன்

ஈழத்து மண்
புரிந்து விட்டது

போராட்டங்கள்
முடியவில்லை
பிறந்த நாள் தொட்டு
போராடப் பிறந்தேனோ

மகனாக பிறந்ததில்
சிரித்துக் கொண்டே
அழுகின்றாள் தாய்

தாய் முகத்தில்
மகிழ்ச்சி வருமா
காலந்தின்
விடியலுக்காக
காத்திருக்கிறேன்

Wednesday, January 20, 2010

21.12.2012

ஓர் விரல் காட்டி நின்றாய்
ஆணையிடுகிறாய்
என நினத்தோம் -
ஆனால்
ஓராண்டுதான்
வாழப்போகிறேன் என
சொல்லாமல் சொல்லிவிட்டாயே
அறிஞர் அண்ணாவின்
மறைவின்போது
கலைஞரின்
கண்ணீர் அஞ்சலி

நான் மூவிரல் காட்டி
மூன்றாண்டுகள் தான்
வாழப்போகின்றோம் என
சொல்லிவிட்டேன்
புரிந்து கொண்டால் சரி
21.12.2012