(வயது முதிர் காலத்தில்
பிள்ளைகள் நலம் வாழ
பிரார்த்திக்கும் பாசமுள்ள
தந்தையின் கண்ணீர்த் துளி
காணிக்கை)
பிள்ளைகளின்
திருமணத்திற்குப் பின்
கடமை முடிந்து போன
மகிழ்ச்சி -
பெற்றோர் பெருமூச்சு
'இனிமேல்தான்
நிம்மதி இல்லை'
அனுபவசாலியின்
அன்புக்கூற்று
ஏற்க மறுத்து
ஏளனமாக
சிரித்தேன் - அன்று
உண்மைதான்
உணர்கின்றேன் - இன்று
வயது ஆறோ
ஆறு ஐந்து முப்பதோ
குழந்தைகள்
என்றும் நம்
பிள்ளைகள்தான்
வயது முதிர் காலத்தில்
தாங்கும் வலிமை
குறைந்த வேளையில்
பிள்ளைகள் சிரிப்பு
நம் ஆயுள் வாழ்வின்
நாள் நீடிப்பு
அவர்கள் சோகம்
நம் நாள் குறைப்பு
குழந்தைகளின்
சிரிப்பில்
பட்ட கடன்
தெரியவில்லை - அன்று
பிள்ளைகளின்
சோகத்தில்
மனவேதனை
தாங்கவில்லை - இன்று
சிறு சோதனையில் கூட
சோர்வு, மன உளைச்சல்
சிரிக்க மாட்டார்களா
ஏங்குகிறது மனம்
சிரிப்பதைப் போல்
நடிக்கும் பாசப்பறவைகள்
அதுவும் புரிகின்றது
நானும்
அழுது கொண்டே
சிரிக்கின்றேன்
இன்னும் எத்துணை
நாட்களுக்கு................
ஓ இறைவா...............
நெஞ்சு வலிக்குதய்யா
பிள்ளைகளை
மகிழ்வோடு
வாழ வழி செய்
வாழ விடு
உமக்கு
காணிக்கையாக
உதிரப்போகும்
என்னை
ஏற்றுக்கொள்
என்றும் தயார்
கண்ணீருடன்..
2 comments:
// உமக்கு
காணிக்கையாக
உதிரப்போகும்
என்னை
ஏற்றுக்கொள்
என்றும் தயார்//
தியாகங்களே மனிதத்தை மேன்மையுறச் செய்கின்றன.
திரு.தமிழ்வாணன் அவர்களே
வணக்கம்
பிள்ளைகள் நலம் வாழ ஒவ்வொரு தந்தையும் எதையும் செய்யத் தயார்
என்பதே இவ்வரிகள்
வரிகள் என்பதைவிட உண்மை
கருத்துக்கு நன்றி.
தொடரட்டும் உம் எழுத்துப் பணி.
Post a Comment