Sunday, July 26, 2009

வானம் அழ


வானம் அழ
பயிர்கள் சிரிக்க
ஒருவர் தியாகம்
பிறர் வாழ்க்கை


உன் பெற்றோர்க்காக
உன் உடன் பிறப்பிற்காக
உன் குடும்பத்திற்காக
உன் நாட்டிற்காக


உன் தாய்க்காக
உன் தாய்மொழிக்காக
உன் தமிழுக்காக
உன் உயிர்மூச்சை


இளைஞனே
நீ தியாகம் செய்
நாளை
நீ சரித்திரம்


2 comments:

Tamilvanan said...

தியாகம், மனித வாழ்வின் உன்னதம்.
நாம் யாவரும் தினமும் சிறு சிறு தியாகங்களை சுயத்திற்க்காக பாசத்திற்காக நட்புக்காக செய்துக் கொண்டுத்தான் இருக்கிறோம். ஒன்று நம் மகிழ்ச்சிக்காக அல்லது மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்த மட்டுமே.
அதுவே இனத்திற்காக நாம் செய்யும் தியாகம் குறைவே, இதனை நிவர்த்தி செய்ய வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் உள்ளோம். எந்த மாதிரியான தியாகங்கள் செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு நீண்ட பட்டியலே போட வேண்டி வரும்.

நம் நாட்டில் குடியேறிய சீனர்களின் முதல் தலைமுறை செய்த தியாகமே இன்றும் அவர்கள் இன்னாட்டில் பல துறைகளில் அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறார்கள்.

நம் தலைமுறை இன் நாட்டில் தொடர்ந்து சிறப்பாக வாழ்ந்திட நாம் பல கடுமையான தியாகங்கள் செய்திட வேண்டும்.

தமிழ் said...

அருமை