Tuesday, July 28, 2009

சொல்லுக்குள் சொல்


வார்த்தைக்குள் வார்த்தை
விடையைத் தந்தது
மழைக்குக் குடை
கைப்பிடியைப் போல்

நிம்மதி
மதியால் தேடு
வாழ்க்கை
கையால் தேடு
தொடங்கி விட்டேன்
தொடர்ந்து கூறு
எமக்குள் சில
உம்மிடம் பல

கண்டுபிடி
காட்சிப் பொருளாக்கு
கண்விழித்து
காத்திருக்கின்றேன்.




4 comments:

Tamilvanan said...

உன் கவிதை
கதையில் விதை கண்டேன்

நீல விழியில்
நீ நிரந்தரம்
எங்கும் எதிலும் காண்போம்
தரம்

எழுதப்படட்டும் உன்
சரித்திரம்

இதனை எழுதிடும் நேரம்
என் கோப்பையிலே
தரம் மி்கு ரம் ?!?!?!?!

சுகாந்தினி said...

தமிழ்வாணன்,
நன்றி

சொல் விளையாட்டு சுவையான கவிதைக்கு அவசியம்.
சொல்லுக்குள் உமக்கும் விளையாடத் தெரியும் என்பதற்கு உம் கவிதை ஓர் எடுத்துக்காட்டு.

மனோவியம் said...

நீல விழி பார்வையில்
மிதந்து வரும்
நிமிடங்கள் கோடி
நிலவெளியில் நிததமும் பரவும்
உந்தன் கவிதை பல நூறு கோடி

ஆதி வெளியில் அற்புதங்களும்
அண்டாச்சாரத்தின் அறிவும்
உங்கள் கவி விழியை
ஜோதி பிழம்பாய் பிராகாசிக்க
எனது வாழ்த்துகல்......

அன்புடன் ம்னோவியம்

மனோவியம் said...

வாழ்த்துகள்