Tuesday, July 14, 2009

சிலந்தி வலை


இளைஞனே
ஒன்றும் தெரியாத
புரியாத ஈக்கள்
மாட்டிக்கொண்ட இடம்
சிலந்தி வலை
மாற்று பெயர்
நா.............................
கண்ணதாசனிடம்
இரவல் வாங்கிய வரிகள்
உமக்கும் பொருந்தும்
நாளை நீ மாறுவாய்
என்னை நினைப்பாய்.
இது உறுதி.

ஓர் இடுகையில்
ஆரம்பக் கால ஆசிரியரை
'இடி அமீன் வாத்தி'என
நினைவு கூர்ந்தார்
பட்டதாரி எழுத்தாளர்
இதுவா பண்பு
இதுவா நன்றிக்கடன்
வலைபகுதியில்
எப்படி வேண்டுமானாலும்
எழுதலாமா

அறிவுப் பசிக்கு
கண்களைத் திறந்த
ஆசிரியருக்கு
மரியாதைக் கொடுங்கள்
படித்த பட்டதாரி
எழுத்தாளர்களே

நம் சமுதாயக்
மூட நம்பிக்கைகளைப்
பற்றி பெரியார்
சொல்லாததா நீர்
சொல்லிவிடப் போகின்றாய்

ஆயினும் சொல்வதை
இனியச் சொற்களால்
சொல்லுங்களேன்
இனிய எழுத்தாளர்களே

3 comments:

VIKNESHWARAN ADAKKALAM said...

நான் திருந்திவிட்டேன்... என் கண்களை திறந்துவிட்டீர்கள்... :)

வால்பையன் said...

நண்பர் விக்னேஷை திருத்திய நீலவில்லி ஸாரி நீலவிழி வாழ்க!

சுகாந்தினி said...

நன்றி
விக்னேஸ்,
எழுத்து வேகம்,
விவேகம், வியூகம்
உம்மிடம் கண்டேன்
இனிய தமிழ்ச் சொற்களைப்
பயன்படுத்தினால்
உம் கிறுக்கல்கள்
மேலும் சிறப்படையும்
தொடரட்டும் உம் பணி