சோனி,
உதட்டோடு உறவாடி
உள்ளதை உள்ளபடியே
பிரதிபலித்தாயே
உமக்கா இக்கதி..?
ஈராண்டுகள் மட்டும்
என்னோடு பேசி
இன்று
கீழே விழுந்து
உயிர்க்குலைந்தாயே
தெளிவான குரல்
சொன்னதை சொன்னபடியே
உச்சரிப்புக் குறையாமல்
எதிரொலிக்கும் உன் திறன்
வேறு யாருக்கு வரும்
சோனி
உன்னையன்றி
வேறு யாரையும்
கைப்பிடிக்க
என் மனம் இடம் தரா
எவ்வளவு
செலவானாலும்
குணப்படுத்தி
மீண்டும் உன்னையே
கரம் பிடிப்பேன்
கவலைப்படாதே
டிராகனின் நடனம்: அமிலக் கல்லறை
4 years ago
5 comments:
’செல்’லமான உங்களின் சோனி
சீக்கிரமே குணமாகி - உங்களின்
பக்கம் வந்து பேச
பிரார்த்திக்கிறேன்
அன்புடன்
கல்யாண்குமார்
www.kalyanje.blogspot.com
kalyangii@gmail.com
கல்யாண்,
நன்றி.
நேற்று மேசையின் மீது வைக்கப்பட்ட என் சோனி கைத்தொலைப்பேசி கீழே விழுந்து ஊமையாகி விட்டது.
அதன் சோகமே இக்கவிதை.
குணமானப் பின் தெரிவிக்கின்றேன்.
பிரார்த்தனைக்கு நன்றி.
தொடரட்டும் எழுத்துப் பணி
சுகாந்தினி
அதிகாலை அவசரத்திலே
உதட்டோடு உறவாடினாயே
பல் துலக்காமல் பல நாட்கள்
அதற்காகத்தான் இக்கதி...!
ஈஈஈரா.....ண்ண்டுகள்ள்ள்ள்
என்னில் பேசியே
கொன்றாயே
இது விபத்தல்ல
தற்கொலை
வந்த அழைப்பென்றால்...
வேண்டிய அழைப்பென்றால்...
கோபத்திலும் சிரித்துக் கொண்டு
நான் சூடாகும் வரை
அரைமணி நேர அறுவை
போடும் உன் திறன்
வேறு யாருக்கு வரும்
சுகாந்தினி
புதியவன் என் தம்பி
சோனி எரிக்சன்...
சிரித்து பேசி
உன் மனதில் இடம் பிடிப்பான்
செலவே இல்லாமல்
மக்ஸிஸ் உலகிற்கு
நீ வந்தவுடன்
இலவசமாய் இணைவான்
உறவாடு உரையாடு...
விடைபெறுகிறேன் ஜாலியோடு
ஜாலி....ஜாலி....ஜாலி....
posted by சோனி கைத்தொலைப்பேசி
//மீண்டும் உன்னையே
கரம் பிடிப்பேன்
கவலைப்படாதே//நல்ல வரண் உங்களுக்கு.மீண்டும் கை நழுவ விடாதீர்கள்......
நல்ல கற்பனை எதையுமே கரு பொருளாக கொண்டு கவிதை வடிக்கும் உங்கள் திறன் போற்ற தக்கது. வாழ்க வளமுடன். //தமிழ்வாணன் ...இருந்தாலும் உங்களுக்கு இவ்வளவு லொல்லு கூடாது.வருத்ததில் இருக்கும் வசந்தியை ....சாரி...சுகாந்தியை பார்த்த இந்த வம்பு.....ஆகா ஒரு புது கவிஞனை ஈன்றேடுத்திருக்கிறது தமிழ் வலைபதிவகம்.....வங்க தமிழ்வாணன்.
வாங்க தமிழ்வாணன்
Post a Comment