Tuesday, August 11, 2009

ஓ.. சுதந்திரத் தந்தையே...




ஓ..
சுதந்திரத் தந்தையே

சுதந்திரத்தை வாங்கி
கையோடு
கொண்டு சென்றாய்
தந்திரத்தை அல்லவா
விட்டுச் சென்றாய்



குள்ளநரி மனித
மத ,பதவி
இனப் போராட்டங்கள்
இன்னும்
ஓய்ந்தப் பாடில்லை


சுதந்திரத் தந்தையே

உயிர் பெற்று வா
சுதந்திரத்தைக்
கொடுத்துவிட்டு
தந்திரத்தை
எடுத்துச் செல்

சுதந்திரப் போர்வையில்
சதிராடும் செயல்கள்
அமைதிப் போராட்டங்கள்
அமர்க்களமாய்
சந்தி சிரிக்கின்றன

உயிர் பெற்று வா

3 comments:

Tamilvanan said...

சுதந்திரத் தந்தையே

சுதந்திரத்தை வாங்கி
தந்து தந்திரமும்
செய்தாயே..

மலாயாவில்
சபா சரவாக்கை
இணைத்...தாய்
தந்தையே

எனது மலேசியாவை
பெரிது செய்தாய்
விகிதாசாரத்தில்
எனது இனத்தை
சிறிது செய்தாய்

நாட்டில் மேலும் பல
(சு)தந்திரம் செய்ய
உயிர் பெற்று வா

சுகாந்தினி said...

தமிழ்,
உம் மாற்று கற்பனை வரிகளை எவ்வள்வு பாராட்டினாலும் தகும்.
வாழ்த்துகள்

கே.பாலமுருகன் said...

ரெண்டு பேரும் சுதந்திர தின கவிதை போட்டியை ஏற்பாடு செய்யுங்கப்பா. ரொம்ப மும்முரமா இருக்கீங்க