Friday, August 7, 2009

பெண் ஓர் இனிப்பான விஷம்



அன்று
காதலில்
நான்
கரும்பானேன்



இன்று
மாற்றானை
கைப்பிடிக்க
கறிவேப்பிலையானேன்

தேவையின் போது
பயன்படுத்தி
தேவையற்ற போது
தூக்கி எறியப்பட்ட
கறிவேப்பிலை நிலை

எனவேதான்
பெண் ஓர்
இனிப்பான விஷம்
எனக்கு மட்டும் .......

5 comments:

மனோவியம் said...

பெண் ...இன்பமும் துன்பமும் கலந்த கலவை.சிலருக்கு இனிப்பு,சிலருக்கு புளிப்பு. சிலருக்கு மருந்து.சிலருக்கு விஷம் இரண்டும் கலந்த சுவை அது ஒரு தனி சுவைதான்.பெண்னானவள் புரியாத புதிர்.விடைக்கான விடுக்கதை.அவளை புரிந்துகொண்டால் உங்கள் அதிர்ஷ்ட்டம்...புரியவிலை என்றால்
உங்கள் துர்திஷ்ட்டம்

துபாய் ராஜா said...

எனக்கு மட்டும் என அழகாக முடித்துவிட்டீர்கள்.

சுகாந்தினி said...

மனோ,

கருத்துக்கு நன்றி
ஓர் இளைஞனின் உணமைக் கதையின் சிந்தனையே இக்கவி.

துபாய் ராஜா,
நன்றி
எனக்கு மட்டும் என்பது நானல்ல
பாதிக்கப்பட்ட இளைஞன் சார்பில்.....

கே.பாலமுருகன் said...

வணக்கம் சுகா. வாழ்த்துகள். தொடர்ந்து ஆழமான வாசிப்பைத் தேடுங்கள். நிறைய வாசியுங்கள்.
கவிதை களத்தின் அடுத்த இடப்பெயர்வைத் தேடி கண்டடையுங்கள். கவிதைகள் வளரும்.

Tamilvanan said...

இனிக்கும் கரும்பே
உன்னை அதிகம்
சுவைத்ததால்

வாந்தி மயக்கம் தலைசுற்றல்
சர்க்கரை வியாதி!!

மாப்பிள்ளை (கறி)வேப்பிலை
தேடினேன் ஓடினேன்

காலம் கடந்து
சொல்கிறாய்
நானும் (கறி)வேப்பிலையென்று

கரும்பே நீதான்
இனிப்பான விஷம்

வாந்தி மயக்கம் தலைசுற்றல்
சர்க்கரை வியாதி