குழிக்குள்
தங்கம்
யாருக்குச்
சொந்தம்..?
தங்கத்தை
எடுத்து
உரியவரிடம்
சேர்க்க வேண்டும்
அவ்வளவுதான்
பிரசினை முடிந்தது
ஆனால் இன்று
நடப்பதோ வேறு
குழிக்கு வெளியே
தங்கத்தைப் பற்றிய
ஆய்வு
யாருக்குச் சொந்தம்
எனபதில் குழப்பம்
இப்படியோ
அப்படியோ என
வீண் விவாதம்
விட்டுகொடுக்காத
முடிவுகள்
வாய்ப் பேச்சு
கைகலப்பில் முடிவு
இறுதியில்
குழிக்குள் ஒருவன் விழ
மற்றவர்கள் நகைப்பு
இன்றைய
நாட்டு நடப்பில்
நம்மிடையே காணும்
நடைமுறை வழக்கம்
இதுதான்
பிரசினைகளைச் சுலபமாக
தீர்க்க வழி இருந்தும்
தீர்க்காமல் பேசியே
காலத்தைக்
கழிக்கின்றோம்
தங்கம் இன்னும்
குழியிலேயே
இருப்பது போல...
நானும் இன்னும்
எடுக்காமல்
இவ்வளவு நீளம்
எழுதிவிட்டேனே...
உங்களில் நானும்
ஒருவன்
அதனால்தான்
என்னவோ....
2 comments:
நம் மக்களிடையே ஏகோ பிரச்சனை அதிகம்... அது கூட இப்படி பிரச்சனைகள் இழுத்தடிக்க நேரிடுவதற்கான காரணமாக இருக்கக் கூடும்...
குழிக்குள்
தங்கம்
யாருக்குச்
சொந்தம்..?//
தற்போதைய நிலமையில் வலுத்தவனுக்கு.
//விட்டுகொடுக்காத
முடிவுகள்//
தங்கம்மா தங்கம் யாரு விட்டுகொடுப்பா?
//நானும் இன்னும்
எடுக்காமல்
இவ்வளவு நீளம்
எழுதிவிட்டேனே...//
ரொம்பத்தான் இழு இழுன்னு இழுத்திட்டிங்க
//உங்களில் நானும்
ஒருவன்
அதனால்தான்
என்னவோ....//
பிரசினைகளைச் சுலபமாக தீர்க்க வழி இருந்தும்
தீர்க்காமல் எழுதியே
காலத்தைக் கழிக்கின்றோம்
Post a Comment