Tuesday, August 4, 2009

ஏனய்யா வம்பு ?




ஒரு கட்சியில்
சேர்ந்து
மக்களுக்கு
சேவை செய்ய
ஆசை




ம.இ.காவில்
சாமிவேலு -சுப்ரா
ஓய்ந்தபாடில்லை
கூட வளர்ந்த சோதியே
எதிரியான நிலை

ம.மு.க.வில்
கேவியஸ் -முருகையா
தூறல் நிற்கவில்லை
வளரும் இளந்தலைவனை
ஒழித்துக் கட்டும் நிலை

ஐ.பி.எப்.பில்
நீயா நானா
தலைவர் போராட்டம்
பண்டிதனுக்கும் பின்
பதிவு ரத்தாகுமோ நிலை

ஹிண்ட்ராப்
உரிமைக்குரல் கொடுத்த
நேற்றையப் போராட்டவாதிகள்
இன்று அரசியல்வாதிகள்
ஆளுக்கொரு கட்சி

புதிய கட்சிகள்
அறிக்கைகளோடு சரி
செயல் பாடு காணோம்
நாளைய நிலை
புரியவில்லை

ஏனய்யா வம்பு ?
தனியாக உழைத்து
குடும்பத்தை உயர்த்தி
தன்னிச்சையாக
உதவுவோமே.......

2 comments:

Tamilvanan said...

//தனியாக உழைத்து
குடும்பத்தை உயர்த்தி
தன்னிச்சையாக
உதவுவோமே....//

உன்னத கொள்கை
உயர்வை நோக்கும்

வாருங்கள் நண்பர்களே
உன்னத கொள்கைக்காக
புதுக் கட்சி அமைப்போம்


கட்சியின் பெயர்
நீல விழி
புது வழி
புதுமை மொழி
'தன் குடும்பம் வளர்ந்தால்
அடுத்தவன் தானாய் வளரும்'

ஆயுட் கால தலைவி சுகாந்தினி
முன் மொழிந்து விட்டேன்
யாராவது வழி மொழியுங்களேன்.

சுகாந்தினி said...

திரு.தமிழ்வாணன்
கட்சி அமைப்பது நம் நோக்கமல்ல.
இன்றைய நாட்டு நிலைமையை இளைஞர்கள் புரிந்து தன்னையும் குடும்பத்தையும் காப்பாற்றினால் போதும்.சமுதாயம் உயரும்.

ஒருவேளை
நான் கட்சி தொடங்கினால்
நீரே மூலக் காரணம்.