எண்பத்தாறு வயது
யாரைய்யா சொன்னது?
எழுத்தால் ஆட்சியைப்
பிடித்தவர் நீர் !
உம்மால்
தமிழுக்குப் பெருமை
நீர் ஓர் ஆழ்கடல்
எழுதாத எழுத்தா
நீர் ஓர் ஆழ்கடல்
எழுதாத எழுத்தா
வரையாத ஒவியமா
தொடாத காவியமா
உம் பேனாவின்
மை மட்டும்
எப்படி ஐயா
சரித்திரம் படைக்கின்றது
சொல்லிக் கொடுங்கள்
நீர் ஓர் ஊற்று
அள்ள அள்ள குறையா
அமுத சுரபி
உம்மிடம் கற்றுக் கொள்ள
வாழ்நாள் போதாது
உம் காலத்திலேயே
உம் தமிழை
இரவல் வாங்கி -நாங்கள்
தாளை நனைக்கின்றோம்
அது ஒன்றே போதும்
உம் பேனா முனை
வலிமையைப் போல்
பல்லாண்டு வாழ
இறைவனிடம்
கெஞ்சுகின்றோம் - வாழ்க !
1 comment:
//கலைஞரே!
எண்பத்தாறு வயது
யாரைய்யா சொன்னது?//
அவருதான் சொல்றாரு.. நம்ம போயி பெர்த் சர்டிபிகேட்டை கேட்கவா முடியும்?
//
உம் பேனா முனை
வலிமையைப் போல்
பல்லாண்டு வாழ
இறைவனிடம்
கெஞ்சுகின்றோம் - வாழ்க !//
நீங்க மலேசியாவில் இருக்கீங்க. உங்களுக்கென்ன வந்தது? இங்க தமிழ்நாட்டுல இருக்குறவங்கதான் இதைச் சொல்லனும்.
Post a Comment