Monday, June 15, 2009

தாலி தேவையா.. ? (கற்பனையல்ல..)

இருபத்தைந்து வயது இளைஞன். நல்ல பண்பாளன்.நிறைய கதைப் புத்தகங்களையும் நாவல்களையும் படித்தவன்.

என்னுடன் பேசிக்கொண்டிருந்தான்.
"தாலி தேவையா..? தாலி கட்டாமல் வாழ முடியாதா ?
இந்து மதம் எனக்குப் பிடிக்காத மதம். மதமின்றி மனிதனாக வாழ வேண்டும்" என வயதிற்கு முதிர்ந்த விவாதத்தில் ஈடுபட்டான்.
நான் அதிர்ந்து போனேன்.இருப்பினும் இயன்ற மட்டும் இளைஞனைத் திருப்தி படுத்த விளக்கம் கொடுத்தேன்.நிறைவு பெறாமலே இளைஞன் சென்றுவிட்டான்.

யோசிக்கின்றேன்.

இவரைப் போல் சிந்தனையுடைய சில இளைஞர்களுக்கு
யார் மனதையும் புண்படுத்தாத வகையில்
நல்லதொரு தெளிவான விளக்கத்தை ஆன்மீகவாளர்கள்,சிந்தனையாளர்கள் பதில் கூற விரும்பினால் சிறப்பு.

எதிர்ப்பார்க்கின்றேன்..

7 comments:

கோவி.கண்ணன் said...

தாலி அணிவது ஆண் அடிமைத்தனம் என்று நினைக்கிறோம், திருமணம் ஆச்சா இல்லையா என்று கேட்காமலே தெரிந்து கொள்ள இந்திய பெண்களுக்கு அது பயன்படுது. தாலி இல்லாவிடில் ஜொள் பார்டிகள் மற்றும் பெண் பித்தர்கள் தாலியைப் பார்த்ததும் ஓரளவு பின் வாங்கிவிடுவார்கள். தாலி ஒரு தற்காப்பு ஆயுதம் தான். அணிவதால் தவறு இல்லை.

மற்றபடி தாலி செண்டிமெண்ட் ரொம்ப ஸ்டுபிட் தனமான கொள்கை.

VIKNESHWARAN ADAKKALAM said...

தாலி அணிவது ஒரு பெண்ணின் உடலை பெறுவதற்கான அணுமதிச் சீட்டாக மட்டும் தான் நமது சமூகம் பார்த்து வருகிறது. இப்படி ஒரு மகா மட்டமான பார்ப்பனிய சிந்தனை பெண் அடிமைக்கு வழிச் செய்வதெயன்றி வேறொன்றுமில்லை...

Anonymous said...

தாலி தேவைப்படும். அடைவு வைக்க. பசங்களுக்கு ரெட் சிக்னல் காட்ட.
பவிசு கொடுக்க. பயமுறுத்த, அதாவது அறுத்துடுவன் எண்டு. செத்தவுடன் பங்கு போட.

சுவாதி said...

//திருமணம் ஆச்சா இல்லையா என்று கேட்காமலே தெரிந்து கொள்ள இந்திய பெண்களுக்கு அது பயன்படுது.//

அதெல்லாம் கேட்காமலே தெரிந்துக் கொள்ள முடியாது. மஞ்சள் கயிறென்றால் சரி. தங்க செயினில் கோர்த்து மேலாடைக்குள் மறைத்து கொண்டிருக்கும் பொழுது எப்படி தெரிந்துக் கொளவது??

Thamizhan said...

திருடர்களுக்குப் பயந்து வெளி நாடுகளில் வாழும் பெண்கள் தாலி அணிவதில்லை.
பத்திரமாக வீட்டில் வைத்து விடுவார்கள்.
அவர்களெல்லாம் நன்றாகத்தான் வாழ்கிறார்கள்.
பயணம் செல்பவர்கள் முக்கியமாகக் கவணமாக இருக்க வேண்டும்.
கழுத்துக்கே ஆபத்து.

Anonymous said...

இன்னும் எத்தனை காலத்துக்கு கல்யாணம் கன்றாவினு செலவு செய்துக் கொண்டு கிடக்க போறிங்க.தாலி கட்டுவதென்பது முட்டால் தனமா செயல் தான். பெண் பாதுகாப்பு என்பதும் அங்கிகாரம் என்பதும் தாலியினால் வந்துவிடும் என்பது நகைப்புக்குறியது.

Kannan said...

tali tevai ar yenbathu indraiyeh kelvi ar?
kalyanem pannitan aagenuma yenbathu nalaikku varum kelviyo?