Sunday, June 7, 2009

ஊக்கம்

ஊசலாடும் உயிரைக் கூட
உட்கார வைத்து
நடக்க வைத்து
நிமிர வைத்து
உயர்வான சிந்தனைக்கு
உந்து தள்ளி
ஒய்யாரமாய்
நடை போட வைக்கும்
மாபெரும் சக்தி

சோர்வில்
பிணமாக
நடமாடுவோர் சிலர்

ஊக்கத்தில்
இமயத்தைத்
தொட்டோர் பலர்

நீர்......
எந்த ரகம் ?

1 comment:

பழமைபேசி said...

அம்சமா இருக்கு... உங்க மாதிரி ஆட்கள்கிட்டதானே தமிழ் இருக்கு... பெருமையா இருக்குங்க!